TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்றும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
Mettur Dam: மீண்டும் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 1500 கன அடி நீர் திறப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 11 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 34 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க..
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப்போவது யார்? என்பதை இந்த தேர்தல் தீர்மானித்துவிடும். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு மையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் சீரமைக்கப்பட்டது. மேலும் படிக்க..
Savukku’ Shankar : ”அடுத்தடுத்து பாயும் வழக்குகள், அதிர்ச்சியில் சவுக்கு சங்கர்” திருச்சியில் பெண் ஏ.எஸ்.பி. புகார்..!
பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், திருச்சியில் ஒரு பெண் கூடுதல் காவல் கண்காணிப்பாளரே அவர் மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் படிக்க..
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; இணையம் இல்லாமலும் பார்க்கலாம்- எப்படி?
மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. இந்த நிலையில் வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் தேர்வு முடிவுகளை எப்படி அறிந்துகொள்வது என்று பார்க்கலாம். மேலும் படிக்க..