இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்... மக்களே கடும் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்


இன்று முதல் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த நாட்களில் வெயிலில் இருந்து எப்படி பாதுகாத்துக்  கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க..


கரூர் சந்தன கருப்பண சுவாமி ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலய 12ஆண்டு சித்திரைத் திருவிழா.


சித்திரை மாதம் என்றாலே பல்வேறு உள்ளூர் அம்மன் வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  கரூர் திண்ணப்பா நகர் மற்றும் திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பண சுவாமி, அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலய பனிரெண்டாம் ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆலய வாசலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. மேலும் படிக்க..


Swell Surge: பொதுமக்களே உஷார்.. கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. கடலில் நிகழப்போகும் மாற்றம்!


தமிழ்நாட்டில் இன்று கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்றும், கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, “கர்நாடகா, மகாராஷ்ட்ரா பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) விடுத்திருந்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..


EPS Pressmeet: நாட்டிற்கு குடிநீர் முக்கியமல்ல, பீர் தான் முக்கியம் - திமுக ஆட்சி குறித்து இபிஎஸ் ஆவேசம்


சேலம் ஏற்காடு தனியார் பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஏற்காடு பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது ஒன்பது பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க


Savukku Sankar Arrest : யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு : முழு விபரம் இதோ..


பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு யூ டியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.மேலும் படிக்க..