கரூர் திண்ணப்பா நகர் விஸ்தியிருப்பு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பண சுவாமி அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலய 12 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா.




 


சித்திரை மாதம் என்றாலே பல்வேறு உள்ளூர் அம்மன் வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  கரூர் திண்ணப்பா நகர் மற்றும் திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பண சுவாமி, அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் ஆலய பனிரெண்டாம் ஆண்டு சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆலய வாசலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆலய வாசலில் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து தொடர்ச்சியாக சந்தன கருப்பண்ண சுவாமி மற்றும் சப்த கன்னிமார் சுவாமிக்கு கலசங்கள் பிரதிஷ்டை செய்து தொடர்ச்சியாக பல்வேறு மூலிகையால் யாகத்திற்கு சிறப்பு நாமாவளிகள் கூறினார்.




 


 


அதன் தொடர்ச்சியாக கலசத்திற்கும் யாகத்திற்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, திண்ணப்பா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்த கன்னிமார் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி,பால், தயிர், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலயத்தின் மூலவரான அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பண்ண சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 



 


அதன் தொடர்ச்சியாக பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பண்ண ஸ்வாமி மற்றும் சப்த கன்னிமார் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் திண்ணப்பா நகர் மற்றும் திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை திண்ணப்பா நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்பண்ண சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial