உலக வானிலை அமைப்பு, சாதாரண வெப்பநிலை ஆனது அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் தினசரி வெப்பநிலை மற்றும் தீவிர வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்றது. வெப்பம் தொடர்பான பல்வேறு நோய்கள், உடலியல் மன அழுத்தம் ஏற்படுகிறது. தீவிர வெப்பநிலை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வளிமண்டல மாற்றங்கள் மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றன. வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் வாய்வழி நீரிழப்பு தீர்வு மூலைகளை (ORS CORNERS) ஏற்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பொது பயனாளிகளுக்கு ஓஆர்எஸ் வழங்க 1000 நீரிழப்பு புள்ளிகளை (Dehydration points) ஏற்படுத்த அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவரால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 பொது இடங்களில் ஓஆர்எஸ் சென்டர்  (ORS CORNERS) அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெப்ப சலன பாதிப்பு ஏதும் இல்லாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பற்ற உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வது, வயிற்றுப்போக்கு, அமீபியாசிஸ், மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு போன்ற நோய்களைத் தூண்டும். எனவே பாதுகாப்பான நீரில் உடலை நீரோற்றமாக வைத்திருப்பது முக்கியம். உலக சுகாதார நிறுவன அளவுகோல்களின்படி, எந்த தண்ணீரையும் 20 நிமிடங்கள் கொதிக்கவைத்து நுகர்வுக்கு முன் குளிர்விக்க வேண்டும். மேற்கண்ட வழிகாட்டு முறைகளை பொது மக்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.




 திருவண்ணாமலை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள இடங்கள்


1. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், 2.ரயில்வே ஸ்டேஷன், 3.அண்ணா நுழைவு வாயில் (கலைஞர் சிலை அருகில்), 4.அண்ணாமலையார் கோவில் (ராஜகோபுரம் அருகில்), 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை, 6.அண்ணாமலையார் கோவில், அடிஅண்ணாமலை கிராமம், 7 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், 8 மண்டல போக்குவரத்து அலுவலகம் திருவண்ணாமலை, 9 அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 10 கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம், 11 செங்கம் பேருந்து நிலையம்,12 போளுர் பேருந்து நிலையம்,13 சேத்பட்டு பேருந்து நிலையம்,14 மங்கலம் பேருந்து நிலையம்,15 ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம், 16 காட்டாம்பூண்டி பேருந்து நிலையம் ,17 காஞ்சி பேருந்து நிலையம், 18 கலசப்பாக்கம் பேருந்து நிலையம், 19 சாத்தனூர் அணை,20 மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் (பழைய அரசு மருத்துவமனை), 21 கூழமந்தல் பஸ் நிறுத்தம்,22 ஞானமுருகம்பூண்டி, 23 அரியூர், 24 பெருங்கட்டுர், 25 ஆரணி நகராட்சி பழைய பேருந்து நிலையம், 26 ச.வி.நகரம் பேருந்து நிறுத்தம், 27 தச்சூர், 28 கண்ணமங்கலம், 29 பெரணமல்லூர், 30 கொழப்பலூர் பேருந்து நிலையம், 31 பாப்பந்தாங்கல் பேருந்து நிறுத்தம், 32 திருவத்திபுரம் டோல்கேட், 33 தெள்ளார் பேருந்து நிறுத்தம், 34 தெள்ளார் துணை சுகாதார நிலையம், 35 வந்தவாசி பேருந்து நிலையம் பொதுமக்கள் மேற்கண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஓஆர்எஸ் கரைசலை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.