TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?


10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3 மாணவிகள், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாக 91.55 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 8,94264 பேரில், 8,18,743 பேர் (91.55%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர்; 4,22,591 (94.53%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள்: 3,96,152 (88.58%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் படிக்க


TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?


தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க..


Ooty Flower Show : உலகப்புகழ் பெற்ற உதகை மலர் கண்காட்சி துவக்கம் ; சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்!


மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..


10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் 75,521 பேர் தோல்வி: துணைத்தேர்வுக்கு நாளையே விண்ணப்பிங்க! விபரம் இதோ!


10th Supplementary Exam: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 8.45 சதவீதம் பேர் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் படிக்க..


Savukku Shankar: சவுக்கு சங்கர் ஆஃபிஸ் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீஸ்! கஞ்சா வழக்கில் சூடுபிடிக்கும் விசாரணை!


தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தமிழ்நாடு அரசு பற்றியும் யூ டியூபில் பரபரப்பான தகவல்களையும், குற்றச்சாட்டையும் கூறி வருபவர் சவுக்கு சங்கர். இவர் யூ டியூப் ஒன்றில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். உடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் அலுவலகம் பூட்டு: மேலும், அவர் கைது செய்யப்பட்டபோது அவரது காரில் இருந்து கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர், அவரது கார் ஓட்டுனர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, தேனியில் உள்ள பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க