10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து, விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.


TN 10th Result 2024 Topper: 500க்கு ஜஸ்ட் மிஸ்! 499 மதிப்’பெண்கள்’ எடுத்து சாதனை படைத்த ‘காவியங்கள்’ - யார் இவர்கள்?


வேலூர் மாவட்ட தேர்வு முடிவுகள் என்ன ? 


வேலூர்  மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் 9104, தேர்வு எழுதிய மாணவிகள் 9253, தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 18357, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 6885, தேர்ச்சி பெற்ற மாணவிகள் 8181, தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 15066, மாணவர் தேர்வு சதவீதம் 75.63, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 88.41, மொத்த மாணவர்களின் தேர்ச்சி 82.07 சதவீதம் பெற்று தமிழகத்தில் தற்போது வேலூர் மாவட்டம் (38வது இடம்)  கடைசி இடத்தை பெற்றுள்ளது. 


முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?



  •  தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in  அல்லது http://dge.tn.gov.in  ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  • மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.

  • அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 


ALSO READ: Tamil Nadu 10th Result 2024 LIVE: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் லைவ்