127 போலீசாருக்கு அண்ணா பதங்கங்கள்


அண்ணா பிறந்தநாளையொட்டி 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், 100 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் 10 ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்கள் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் வாசிக்க..


 சீமானுக்கு 2-ஆவது முறையாக சம்மன்


நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது சம்மன் அனுப்பட்டுள்ளது. பிரபல நடிகையான விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். நடிகர் விஜயலட்சுமி திருவள்ளூர் மஹிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜராகி இரண்டரை மணி நேரம் மேலாக 8 பக்கங்கள் அளவில் வாக்குமூலம் அளித்தார். மேலும் வாசிக்க..


செய்யாற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை..!


கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று,  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள  சிலாம்பாக்கம் பகுதியில் உள்ள செய்யாறில் புதிய அணைக்கட்டு கட்ட அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து,  தற்பொழுது தமிழக அரசு சார்பில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தடுப்பணை கட்டப்பட உள்ளது.மேலும் வாசிக்க..


 விஷ்வ இந்து பரிஷத் இயக்க முன்னாள் தலைவர் மணியன் கைது


திருவள்ளுவரை பற்றியும் அம்பேத்கரை பற்றியும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரும் இந்துத்துவா சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் ராஜேந்திர பிரசாத் என்றும் அவருக்காக கிளார்க் வேலை பார்த்தவர் அம்பேத்கர் என்றும் அவர் கூறியிருந்தார். திருவள்ளுவர் என்ற ஆளே கிடையாது, அவர் ஒரு கற்பனை என்றும் ஆர்.பி.வி.எஸ். மணியன் கூறியிருந்தார். மேலும் வாசிக்க..


காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு..


காஞ்சிபுரம் மாவட்டத்திலும்  காய்ச்சலால்  நிறைய மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  அதேபோன்று டெங்கு காய்ச்சலாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேபோன்று மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு   ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் வாசிக்க..


விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பேருந்து


கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து பிற முக்கிய இடங்களுக்கும்,பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செப் 18-ஆம் தேதி மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்க பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..


எல்லாருக்கும் எல்லாம்.. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 


 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து ஆங்கில 'இந்து' நாளிதழுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். இந்த நேர்காணலை மேற்கோள் காட்டி எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கில் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர்.மேலும் வாசிக்க..


வானிலை நிலவரம்


காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய  காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14.09.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள  பகுதிகளில்  நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.மேலும் வாசிக்க..


அர்ச்சகராகும் மகளிருக்கு முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட்!


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். க்ரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் செல்லலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.மேலும் வாசிக்க..


புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்...


புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (28). குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். டெங்குவால் கடந்த 2 நாட்களில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வாசிக்க..


வங்கி கணக்குக்கு வருகிறது ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!


மகளிருக்கான உரிமைத்தொகை ரூ 1000 பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.மேலும் வாசிக்க..


ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு.. 


ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் ஆவின் பால்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பால் பல தரத்தில் வழங்கப்படுகிறது. கொழுப்புச் சத்து மற்றும் செறிவூட்டப்பட்ட பால் என பல நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் மட்டுமல்லாமல் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, இனிப்பு வகைகள் ஆகியவை மக்களுக்காக விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வாசிக்க..