• பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரின் பதவி பறிப்பு - அமைச்சராகிறார் டிஆர்பி ராஜா


தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அவர் மீது துறை சார்ந்த குற்றச்சாட்டுகளும், அவரது மகன் மீது மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்முறையாக அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டிஆர்பி ராஜா நாளை அமைச்சராக பதவியேற்கிறார். மேலும் படிக்க



  • பிளஸ் 2-வில் அதிக மார்க்; மாணவர்களுக்கு நேரில் சிறப்பு பரிசு வழங்கும் நடிகர் விஜய் - எங்கு எப்போது ..?


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ஆம் தேதி வெளியாகின. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க



  • வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் புயல்.. தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்று மிகத்தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • சூடானில் இருந்து வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்.. 


சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாதவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் பின்வரும் மூன்று இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குடியுரிமை பெற்ற ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க




  • இறங்கி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு




 திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின், சொத்து விவரங்கள் என கூறி அண்ணாமலை அண்ணாமலை பல விவரங்களை வெளியிட்டார். இதனை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் படிக்க