தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1ஆம் தேதி முதல் இன்று வரை (மே 10 ஆம் தேதி வரை ) 115  சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பாக 81 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகும் நிலையில் 174.1 மில்லிமிட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.




கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)


அதிகபட்சமாக சூரலகோடு (கன்னியாகுமரி மாவட்டம்) 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), கிளென்மார்கன் (நீலகிரி மாவட்டம்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்), தேக்கடி (தேனி மாவட்டம்), விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி மாவட்டம்) தலா 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்), களக்காடு (திருநெல்வேலி மாவட்டம்), கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), பாலமோர் (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 4, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்), விருத்தாசலம் கேவிகே ஏடபிள்யூஎஸ் (கடலூர் மாவட்டம்), விருதுநகர் ஏடபிள்யூஎஸ் (விருதுநகர் மாவட்டம்), ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்), செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), மாம்பழத்துறையக்காடுதுறையாறு ) தலா 3, ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்), தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்), அணைகெடங்கு (கன்னியாகுமரி மாவட்டம்), திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம்), பெரியார் (தேனி மாவட்டம்), ஓடன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி மாவட்டம்), குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்), ஒகேனக்கல் (தருமபுரி மாவட்டம்), முக்கடல் அணை (கன்னியாகுமரி மாவட்டம்), கன்னியாகுமரி, கல்லிக்குடி (மதுரை மாவட்டம்), சண்முகநதி (தேனி மாவட்டம்), எடப்பாடி (சேலம் மாவட்டம்), கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்), மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம்), நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்), அம்மாபேட்டை (ஈரோடு மாவட்டம்), நத்தம் (மாவட்டம் திண்டுக்கல்), நடுவட்டம் (மாவட்டம் நீலகிரி), மாரண்டஹள்ளி (தருமபுரி மாவட்டம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி மாவட்டம்), பென்னாகரம் மாவட்டம் தர்மபுரி), பரமத்திவேலூர் (நாமக்கல் மாவட்டம்), நாங்குநேரி (திருநெல்வேலி மாவட்டம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:  


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.