- அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு - கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக தலைவர்களும், தொண்டர்களும் பாஜகவுக்கு எதிராகவும், அண்ணாமலைக்கு எதிராகவும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
- தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் அதிரடி ரெய்டு - பெரும் பரபரப்பு..!
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அலமாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர். மத்திய துணை ராணுவ படை வீரர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க
தமிழ்நாடு தகவல் தலைமை ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். ஷகீல் அக்தர் நியமனம்
தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணையர் பொறுப்பிடங்கள் கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. 1989 ஆம் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகீல் அக்தர் கடந்த நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். ஷகீல் அக்தர் திமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், ஓய்வு பெறும்போது சிபிசிஐடி டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.மேலும் படிக்க
- "மாமூல் வாங்கும் அண்ணாமலை அல்ல”: பாஜக பதிலடி.. கூட்டணி முறிகிறதா?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவர் கரு. நாகராஜன் செய்தியாளர் சந்திப்பில், அண்ணாமலையின் வளர்ச்சியை அதிமுக விரும்பவில்லை. அண்ணாமலை மீது கண்டனத் தீர்மான கொண்டு வந்ததை நாங்கள் எதிர்க்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- அண்ணாமலையின் பேச்சால் அ.தி.மு.க.வினர் கொந்தளிப்பு - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களின் இதயத்தில் வாழும் தெய்வமாக உள்ளார். அவரது நற்பெயருக்கும், புகழுக்கு களங்கும் விளைவிக்கும் விதமாக பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பேட்டியாக கொடுத்துள்ளார். இது அம்மாவின் தொண்டர்கள் மற்றும் மக்களின் இதயத்தில் பெரும் கொந்தளிப்பும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க