தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அலமாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகத்தின் உள்ளேயே அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எங்கெங்கு சோதனை..? 


கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள் ஒரு சில இடங்களில் பத்திரிகையாளர்களை அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.


கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர். மத்திய துணை ராணுவ படை வீரர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர்.


செந்தில்பாலாஜி வீட்டு முன் அதிவிரைவுப்படை குவிப்பு:


அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு முன்பு அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு 21ம் தேதி அப்போதையை தமிழ்நாடு தலைமை செயலாளர் ராம மோகன ராவின் இல்லம் மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.