• விரைவில் பேரூராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - அமைச்சர் உதயநிதி உறுதி




காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பள்ளிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தபடுமெனவும், விளையாட்டு துறையில் 31 அறிவிப்புகள் கொடுத்துள்ளதை  படிப்படியாக நிறைவேற்றுவேன் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு...தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் பற்றி தமிழ்நாடு அரசு பதில் அளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்த முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • "அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடியுங்கள்” : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்


அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளோடு கலந்துரையாடினார். அப்போது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், பாராட்டை பெறும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என கூறினார். மேலும் படிக்க



  • மாணவர்களே கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர தயாராகுங்க...! விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.அதேபோல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் படிக்க



  • அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை; ஆடியோ விவகாரத்தை அமித் ஷாவிடம் கொண்டு சென்ற இபிஎஸ்!


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை எனவும் பாஜக அதிமுக கூட்டணி தொடர்கிறது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றி பெற செய்வோம் எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க




  • கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த நம்பிக்கை!




தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில்    கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க