விழுப்புரம்: காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பள்ளிகளுக்கு விரைவில் விரிவுபடுத்தபடுமெனவும், விளையாட்டு துறையில் 31 அறிவிப்புகள் கொடுத்துள்ளதை  படிப்படியாக நிறைவேற்றுவேன் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய அனைத்து துறை அதிகாரிகளுடான ஆய்வு கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு கூட்டத்திற்கு முன்பாக விழுப்புரம் நகர பகுதியான பூந்தோட்டம், மருத்துவமனை வீதியிலுள்ள இரண்டு நகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சிற்றுண்டி திட்டம் குறித்து எம்எல்ஏ லட்சுமணன் எம்பி கெளதமசிகாமணியுடன் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவும் தரம் குறித்து உணவு உட்கொண்டு மாணவர்களிடம் உணவு தரமாக வழங்கபடுகிறதா என கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த மாவட்டதிற்கு சுற்றுப்பயணம் செய்தாலும் அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் காலை சிற்றுண்டி தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வோம் அதனடிப்படையில் ஆய்வு செய்ததில் தரமாக உணவு வழங்கப்படுப்பதாக மாணவர்கள் ஆசிரியர்கள் தெரிவித்தனர். காலை சிற்றுண்டி திட்டம் நகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்படுவது போல் பேரூராட்சி பள்ளிகளுக்கு வழங்கபடுமென முதலமைச்சர் பேரவையில் அறிவித்துள்ளார் விரைவில் விரிவுபடுத்தபடுமெனவும், விளையாட்டு துறையில் 31 அறிவிப்புகள் கொடுத்துள்ளதை  படிப்படியாக நிறைவேற்றப்படுமென தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண