தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


நாட்டில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில்    கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்.” கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல், குறைய தொடங்கியுள்ளது. தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது.” என தெரிவித்தனர்.


குட்கா தடை- ஆலோசனை கூட்டம்:


 குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவர்களுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசானை மேற்கொள்ளப்பட உள்ளது. குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் மீதான தடை தொடர்கிறது.  தடையை மீறி விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


எழும்பூர் குழந்தை நல மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 68 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெற்று கொண்டு அதிகாரிகளிடம் வழங்கினார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சிறுநீரகம் கல்லீரல் எலும்பு குணத்தை, உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு தனி பிரிவு ஒன்றை ஏற்படுத்த 57 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மிக விரைவில் அதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.


’மிதமான தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்தாறு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனை பேரில் மருந்துகளை எடுத்துக் கொண்டால் போதும், யாருக்கும் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை ஆக்சிஜன் படுக்கை வேண்டிய அவசியமும் இல்லை,’ என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.


அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதன் விவரம்:



  • தமிழகத்தில் மருத்துவமனைகள் கட்டமைப்பில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

  • ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 65 கோடி ரூபாய் செலவில் புதிய  நரம்பியல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கே எம் சி மருத்துவமனையில் ரூபாய் 125 கோடி ரூபாய் செலவில் டவர் பிளாக் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

  • ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 35 கோடி ரூபாய் செலவில் செவிலியர்களுக்கான குடியிருப்பு டிராமா கேர் சென்டர் 112 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • அரசு பல் மருத்துவ கல்லூரியில் மாணவியர் தங்கும் விடுதி சிதலமடைந்துள்ளது, 64 கோடியே 90 லட்சம் மதிப்பில் 
    புதிய மாணவியர் விடுதி கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட அதிதீவிர சிகிச்சைக்கு பிரிவு கட்டுவதற்கு  விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன் பெயரில் 40 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

  • கொரோனா கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது, இந்தியாவைப் பொறுத்தவரை 11ஆயிரத்திற்கும் மேலே இருந்த பாதிப்பானது தற்போது 7000க்கும் கீழ் குறைந்துள்ளது.