சிசுவின் சடலத்தை துணி சுற்றாமல் ஒப்படைத்த விவகாரம்; பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்
சென்னை கீழ்ப்பாக்கத்தில், இறந்த சிசுவின் சடலத்தை துணி சுற்றாமல் ஒப்படைத்த பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டிசம்பர் 5ம் தேதி குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதனால் பெற்றோர்களிடம் குழந்தையின் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக உயிரிழந்த குழந்தையின் உடலை பிணவரை உதவியாளர் சரியாக மூடப்படாமல் பெற்றோர்களிடம் வழங்கியதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிசு சடலம் ஒப்படைப்பில் அலட்சியம் என்ற புகாரை விசாரிக்க 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணி இடைநீக்கத்தில் இருப்பார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது..
எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழில், ’ நீர் வழிப்படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி உள்ளார். நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.மேலும் வாசிக்க..
மஹாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று..
பாரதி- இந்த வார்த்தைக்கு எந்த ஒரு முன் அறிமுகமும், வாய் ஜால வார்த்தைகளும் அவசியம் இல்லை. இந்திய விடுதலைக்காக மக்களின் உணர்வைத் தன் வீரம் செறிந்த எழுத்துக்களால் தட்டி எழுப்பியவர் பாரதி. தலைசிறந்த கவிஞர். தானும் தன் குடும்பமும் உண்ண ஒரு வாய்க் கவளம் இல்லாத நிலையிலும்கூட, காக்கை, குருவிகளின் உணவுக்காகக் கவலைப்பட்டவர். இந்தத் தலைமுறையினரின் பெரும்பாலானோருக்கு புரட்சியாளராய், கவியாய், பத்திரிகையாளராய், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தவராய் மட்டுமே அறியப்படுபவர். ஆனால் பாரதியின் உள்ளிருக்கும் உணர்ச்சிமிகு காதலனின் பிம்பத்தை அறிந்தோர் குறைவுதான். மேலும் வாசிக்க..
கார்த்திகை மாத பிரதோஷ விழா
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வாசிக்க..
மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பள்ளிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.மேலும் வாசிக்க..
இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க..
வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் உடன் இருக்கும் புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டார். கிட்டத்தட்ட 23 நாட்கள் தேமுதிக தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை இன்று காலை அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் வாசிக்க..