• EPS: "நீலகிரியில் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்


எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  மேலும் படிக்க



  • Bharat Ratna: முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிப்பு!


இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. மேலும் படிக்க



  • ஒரு ஆட்சி அழியும் முன்பு இப்படித்தான் நடக்கும்.. இது 1977 எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது - ஆர்.எஸ்.பாரதி


யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலின் கால் முடியை கூட தொட்டுப் பார்க்க முடியாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.  திமுக இந்துக்களின் விரோதி என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். அவருக்கு கூற விரும்புகிறேன். பெரிய கோவில்கள் உள்ள இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது மேலும் படிக்க 



  • Vijay TVK Meeting: இரவில் நடந்த தமிழக வெற்றி கழகம் ஆலோசனை கூட்டம்..! இனி அதிகாரம் எல்லாம் அவர்களுக்குத்தான்..! 


இந்தநிலையில் பனையூரில்  விஜயின் வலதுகரமாக அறியப்படும்  புஸ்ஸி ஆனந்த்  தலைமையில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது அறிவிக்கப்பட்டது.  முன்னதாக கேரளாவிலும் கால் பதிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் கேரளாவை சேர்ந்த நிர்வாகிகள்  மத்தியிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுமேலும் படிக்க 



  • Chennai Bomb Threat: தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் வெளியான முக்கியத் தகவல்!


சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது விவகாரத்தில், வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரியில் இருந்து இ- மெயில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க



  • Chennai Metro Rail: வேற லெவல்! விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்! அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா?


Chennai Metro Rail: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் மாதிரி வடிவத்தை சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் வெளியிட்டது. இதில் 3 பெட்டிகள் கொண்ட 36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்கவுள்ளன. மேலும் படிக்க



  • Periyar University: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்: அரசு அதிரடி உத்தரவு- பின்னணி இதுதான்!


சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க



  • GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம் - இஸ்ரோவின் புதிய இலக்கு என்ன?


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி-எஃப்14 திட்டத்தின் ஒரு பகுதியாக,  இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த செயற்கைக்கோளானது  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும் படிக்க