அரசியலில் குதித்த விஜய்:


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வந்த  நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamilaga Vettri Kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் கொடி சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன் தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என தெரிவித்துள்ளார்.


தமிழக வெற்றி கழகம்


விஜய் தனது கட்சி பெயர் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு விதங்களில் அவர்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆதரவை தெரிவித்து மக்கள் பணியாற்றி வருகின்றனர் தொடரும் 


ஆலோசனைக் கூட்டம்


இந்தநிலையில் பனையூரில்  விஜயின் வலதுகரமாக அறியப்படும்  புஸ்ஸி ஆனந்த்  தலைமையில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது அறிவிக்கப்பட்டும் வருகிறது.  முன்னதாக கேரளாவிலும் கால் பதிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் கேரளாவை சேர்ந்த நிர்வாகிகள்  மத்தியிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று தொடர்ந்து மக்கள் பணி செய்யுமாறு அந்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது.


 இரவில் நடந்த ஆலோசனை கூட்டம்


இந்த நிலையில் நேற்று இரவு  தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளா ஆலோசனை கூட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது கட்சியை மேம்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் புஸ்ஸி ஆனந்த். முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில்,  உங்கள் பகுதி பிரச்சனைகளை முதலில் தெரிந்து மக்களிடம் சேர்ந்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 அதிகாரம் யாருக்கு ?


தற்பொழுது விஜய் மக்கள் இயக்க  அடிப்படையில்,  மாவட்ட தலைவருக்கே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கட்சியின் தலைவராக விஜய் இருக்கும் நிலையில்  இந்த நிலை நீடிக்குமா என கேள்வி எழுந்த நிலையில்,  திமுக, அதிமுக  உள்ளிட்ட   பல்வேறு கட்சிகளில் மாவட்ட செயலாளருக்கு அதிக   அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்திலும்  மாவட்ட செயலாளருக்கு அதிக முக்கியத்துவம்,  அதிகாரமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன