கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற 17 வயது பள்ளி மாணவி கடந்த 19-ஆம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை கொண்டார்.


தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை என்னும் தகவல் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்துவெங்கமேடு காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவையைத் தொடர்ந்து கரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி  தகவலை சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாணவி உயிரிழந்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் மாணவியின் தாய் ஏபிபி நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்றபோது என் தம்பி, தங்கையின் கணவர் மற்றும் நண்பர்களை காவல் துறையினர் தாக்கினர். என்னையும் தகாத வார்த்தைகளில் பேசினார்கள். பள்ளி மீதுதான் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும்போது ஒழுங்காக சென்றவள் அங்கிருந்து வரும்போது அழுதுகொண்டே வந்திருக்கிறாள்.


பள்ளியில் வேதியியல் ஆசிரியர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பள்ளி நிர்வாக தரப்பிலிருந்து இந்த நிமிடம்வரை யாரும் வரவுமில்லை எங்களை தொடர்புகொள்ளவும் இல்லை” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: கரூர் சிறுமி தற்கொலை விவகாரம்: புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ‛வெயிட்டிங் லிஸ்ட்’


உண்டியல் திருடலையாம்... லஞ்சம் தான் வாங்குனாங்களாம்... குருக்கள் சிசிடிவியில் அதிர்ச்சி தகவல்!


Online Game Addiction | பெரும் பரபரப்பு.. வீட்டில் இருந்து 33 லட்சம், 213 சவரன் நகைகளுடன் தப்ப முயன்ற மாணவன்.. என்ன நடந்தது?


பெரும் பரபரப்பு.. தமிழ் தெரியாத நிலைய அதிகாரி.. ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்..