சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில் கோயிலுக்குள் இருக்கும் இரண்டு குருக்கள் சிசிடிவியை மறைக்கும்படி காட்சிகள் இடம்பெற்றிருந்தன.


அவர்கள் அருகில் உண்டியல் இருந்ததாலும், அவர்கள் உண்டியலை நோக்கி சென்றதாலும் இருவரும் உண்டியலை திருடுவதற்காகவே சிசிடிவியை மறைத்தார்கள் என அனைவராலும் கருதப்பட்டது.


ஆனால் தற்போது அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வெளியூர், வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருவது வழக்கம்.


குறிப்பாக, சஷ்டி, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால், கோயில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம், ரூ.150, ரூ.250 சிறப்பு தரிசனம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.


ஆனால், சிறப்பு தரிசன கட்டணத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ.2 ஆயிரம்வரை பணம் பெற்றுக்கொண்டு மூலவர் சன்னதி கருவறை அருகே சென்று பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.



 


இதற்காக, கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், புரோக்கர்கள் சிலருடன் கைகோர்த்து கொண்டு தினமும் பல ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதித்ததாக தெரிகிறது. 


இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்கத்தான் கோயிலில் சிசிடிவி கேமராவை அவர்கள் மறைத்ததாக கூறப்படுகிறது. 


இதுகுறித்த புகாரின் பேரில், வேலூர் மண்டல இணை ஆணையர் ஜெயராமன் நேரில் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், பக்தர்களிடம் பணம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததற்கான வீடியோ ஆதாரம் சிக்கியது.


இதை தொடர்ந்து கோயில் ஊழியர்களிடம் இணை ஆணையர் ஜெயராமன் விசாரணை நடத்தினார். அதில், கோயிலில் முறைகேடாக பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அனுமதித்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, உதவியாளர் வேலு என்பவரையும், எலக்ட்ரீசியன் குமார் என்பவரையும் பணியிட மாற்றம் செய்து  ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண