மதுரை கோட்டத்தில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் ஒரு முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தற்போதுள்ள ரயில் நிலைய முகப்பு கட்டடத்தை மாற்றி அமைத்து மூன்று மாடி ரயில் நிலைய கட்டிடமாக அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 








மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் இன்று ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். அவருடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா, முதுநிலை கோட்ட மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா, கோட்ட பொறியாளர் ஹிரதயேஷ் குமார், கட்டுமான பிரிவு பொறியாளர் ரதி மற்றும் இந்திய ரயில்வே நில மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்பு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் செய்யவேண்டிய பயணிகள் வசதிகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!

 






ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில்வே கோட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து அந்த பகுதி வழியாக செல்லவேண்டிய கீழ்க்கண்ட தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. நவம்பர் 21 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய பைஸாபாத் எக்ஸ்பிரஸ் (22613), புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (20895), மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), நிஜாமுதீன் தமிழ் நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் (12651), நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் (16352), பெங்களூர் எக்ஸ்பிரஸ் (17235), திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (22620) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மேலும் நவம்பர் 22 அன்று பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (17236) ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

 

பொழுதுபோக்கு செய்திகள் படிக்க: