கரூரில் 8 நாட்களாக நடந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டது? - விவரம் இதோ
சோதனை சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதால் ஐடி அதிகாரிகள் அளித்த புகாரின் படி திமுகவினர் உள்பட19 நபர்களை கைது செய்யப்பட்டனர்.
கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் மின்துறை அமைச்சர் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எட்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதால் ஐடி அதிகாரிகள் அளித்த புகாரின் படி திமுகவினர் உள்பட19 நபர்களை கைது செய்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்தி சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் நடத்தி வந்தனர்.தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மெஸ் மணி சொந்தமான இரண்டு இடங்கள், எம்சி சங்கருக்கு சொந்தமான அதுவலகத்திற்கு சீல் வைத்து உள்ளனர். அதேபோல இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.
இந்நிலையில் எட்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் வழக்கறிஞர் அலுவலகம் பில்டர்ஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று அங்கிருந்து சில ஆவணங்கள் கை படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற சோதனை நிறைவு செய்தனர். வருமானவரித்து அதிகாரிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் இருந்து கிளம்பினர்.கரூர் காமராஜபுரம் பகுதியில் உள்ள பிஎஸ்கே பில்டர்ஸ் இன்ஜினியர் அலுவலகத்தில் இன்று புதிதாக சோதனை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்திலிருந்து கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் 8-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில், கரூர் மாநகர், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான BSK பில்டர்ஸ் என்ற இன்ஜினியர் அலுவலகத்தில் வருமானவரி சோதனை தொடங்கியது. இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் ஆவணங்களை சீல் வைத்த பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர். மேலும், கரூர் லாரிமேடு பகுதியில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் காலை இரண்டு அட்டை பெட்டியில் ஆவணங்கள் எடுத்து சென்றனர். கரூர் காமராஜபுரம் பகுதியில் உள்ள பி எஸ் கே பில்டர்ஸ் இன்ஜினியரிங் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் சிபியூ உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.