தமிழ்நாட்டில் மொத்தம் 12,838 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது . 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை சந்திக்க உள்ளன. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு பிப்ரவி 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 


காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்களுக்கும், மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் மும்முர பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர்.


இந்நிலையில் திமுக சார்பில் சென்னை மாநகராட்சியில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்கள் பட்டியல் அக்கட்சியின் தலைமை சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.


Rahul Gandhi | தமிழ்நாட்டில் இடமில்லை: பாஜகவுக்கு ராகுலின் சவால்- கடந்தகால வரலாறு சொல்வது என்ன?


அதன்படி, சென்னை மாநகராட்சியின் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 99ஆவது வார்டில் போட்டியிடுவதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான பரிதி இளம் சுருதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை எதிர்த்து அந்த வார்டில் களம் இறங்குகிறார்.


இதற்கிடையே, சமீபத்தில் மடிப்பாக்கம் வட்டச் செயலாளர் செல்வம் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அதனையடுத்து 188ஆவது வார்டில் போட்டியிட அவரது மனைவி சமீனா செல்வத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கிறது - நயினார் நாகேந்திரன்


திமுக வட்டச் செயலாளர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது: குற்றவாளியை நெருங்கும் தனிப்படை!


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மடிப்பாக்கம் 188ஆவது வார்டுக்கு திமுகவின் வேட்பாளர் யார் தெரியுமா?