நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் சூழலில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமிளத்துள்ளது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், இதுதொடர்பாக பிப்ரவரி ஐந்தாம் தேதி சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டுமென திமுக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”ஏற்க முடியாது; அன்றே அண்ணா ஆளுநரைப்பற்றி சொன்னார்....” - நினைவு கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்