தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 12838 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது . 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை சந்திக்க உள்ளன. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 


காலை 7 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்களுக்கும், மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் மும்முர பணியில் ஈடுபட்டுள்ளன.


அந்தவகையில் ஆளுங்கட்சியான திமுக சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மடிப்பாக்கத்தின் 188ஆவது வார்டு வேட்பாளராக சமீனா செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட மடிப்பாக்கம் 188ஆவது வார்டி திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி ஆவார்.


முன்னதாக, சென்னை மடிப்பாக்கம் திமுக 188ஆவது வட்ட செயலாளராக இருந்தவர் செல்வம். ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் ஆகிய தொழில்களை செய்தவர். அவர் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், செல்வத்தின் மனைவிக்கு வாய்ப்பு இருந்ததாகவும், அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் பேசப்பட்டது.


இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படையும் பிரிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலை செய்தவர்கள் பற்றிய விபரம் தெரியவந்தது. வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் கீழ் பணியாற்றும் கூலிப்படைதான் இந்த கொலையை செய்திருக்கிறார்கள் என்பது உறுதியானது. மேலும், அதனடிப்படையில் கூலிப்படையை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: திமுக வட்டச் செயலாளர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது: குற்றவாளியை நெருங்கும் தனிப்படை!