Farmers: விவசாயிகளுக்கு ரூ.6000.? உடனே இதை செய்யுங்க, இல்லைனா கிடைக்கவே கிடைக்காது- வெளியான முக்கிய அறிவிப்பு
விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கில் 6ஆயிரம் ரூபாய் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது அடையாள எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயமும் நாட்டின் முன்னேற்றமும்
விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. எனவே விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடன் உதவி திட்டம், சம்பா,குறுவை சாகுபடி திட்டம், மோட்டார் பம்ப் வாங்க நிதி உதவி என பல திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் 6ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் கிஸான் சம்மான் நிதி என்பது இந்திய அரசின் முக்கியமான விவசாயிகள் நலத் திட்டமாகும். இது 2019-ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளுக்கு வருடாந்திர உதவித்தொகையாக ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு 6ஆயிரம் உதவித்தொகை
இந்த உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.வருடத்திற்கு ரூ.6,000, என 3 தவனையாக வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள், இந்த நிலையில் விவசாயிகள் உரிய முறையில் விண்ணப்பிக்காத காரணத்தால் பல லட்சம் விவசாயிகளுக்கு 6ஆயிரம் ரூபாய் கிடைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் 6ஆயிரம் ரூபாய் உதவியை பெற விவசாய அடையாள எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் இல்லாத பட்சத்தில் நிதி உதவியை பெற முடியாத நிலை உருவாகும். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு மூலம் இந்த நிதியை பெறும் பயனாளிகள் வரும் காலங்களில் தவணைத்தொகை பெற தனித்துவ விவசாய அடையாள எண் அவசியமாகும்.
விவசாயிகள் அடையாள எண் கட்டாயம்
விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலா்களை தொடா்புகொண்டோ அல்லது பொதுசேவை மையம் மூலமாகவோ தங்களது ஆதாா் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவுசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகள் தனித்துவ அடையாள எண்ணை பெறலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது வரை நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 13,416 பயனாளிகள் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனா். எனவே மத்திய அரசின் தவணைத்தொகை தொடா்ந்து கிடைக்க இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத பயனாளிகள் தங்கள் தோட்டக்கலைத் துறை மற்றும் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடா்புகொண்டடோ அல்லது பொதுசேவை மையம் மூலமாகவோ தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்கு பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.





















