கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலையிலிருந்து விடுபட்ட உலகமானது தற்போது மூன்றாவது அலையில் சிக்கியுள்ளது. கொரோனா மட்டுமின்றி ஒமிக்ரான் வைரஸின் பரவலும் வேகம் பிடித்துள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.


தமிழ்நாட்டிலும் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 8,981 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.






தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் தொற்றின் வேகம் குறைவதாக இல்லை.






பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொரோனாவுக்கு ஆளாகின்றனர். கோலிவுட்டில் வடிவேலு, அருண்விஜய், மீனா உள்ளிட்டோருக்கு தொற்றானது உறுதியாகியுள்ளது.


செங்கல்பட்டு பரபரப்பு.. காதல் விவகாரம்..! முகம் சிதைத்துக் கொலை..! என்கவுன்டர் முழு பின்னணி..


இந்நிலையில் நடிகர் சத்யராஜுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனைஅய்டுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: MSDhoni: பாகிஸ்தான் வீரருக்கு பரிசு.. சர்ப்ரைஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்த தல தோனி.. என்ன பரிசு தெரியுமா?


”கொரோனாவா..நரகம்கூட கிடைக்காது” : தொற்று பாதித்த ஸ்வரா பாஸ்கரை சபிக்கும் ட்ரோல்ஸ்..


Music Director K Birthday | ‛கடிகாரம் தலைகீழாய் ஓடும்... இவன் வரலாறு எதுவென்று தேடும்...’ கேட்குதா... இது ‛கே’ பிறந்தநாள் ஸ்பெஷல்!