மூன்றாவது அலை கொரோனா இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகிறது. அதேபோல் ஒமிக்ரான் வைரஸின் பரவலும் அதிகரித்துள்ளது.


இதனால் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கிவருகிறது.


தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளும் இரவு நேர ஊரடங்கு, குறிப்பிட்ட நாளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. 




மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். பாலிவுட்டில் கரீனா கபூர், டோலிவுட்டில் மகேஷ்பாபு, கோலிவுட்டில் அருண் விஜய், மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் என பெரும்பாலானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


இந்நிலையில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன.5ஆம் தேதி எனக்கு அறிகுறிகள் தென்பட்டன. 


பரிசோதனை முடிவுகளும் அதனை உறுதி செய்துள்ளன. 5ஆம் தேதி மாலை முதல் நானும் என் குடும்பத்தினரும் எங்களை நாங்களே தனிமைப்படுத்தியுள்ளோம். 






தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துக்கொண்டேன். இந்த வாரம் நான் சந்தித்த அனைவரிடமும் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டேன். 


ஆனால், என்னுடன் யாராவது தொடர்பில் இருந்திருந்தால் தயவுசெய்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்” என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து #SwaraBhaskar என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.


இந்த சூழலில் ட்விட்டரில் ஒருவர் ஸ்வரா பாஸ்கரின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, “2022ல் நான் கேள்விப்பட்ட எல்லாச் செய்திகளிலும் மிகச் சிறந்தது இது. ஸ்வரா பாஸ்கர் இறந்து நரகத்தில்கூட இடம் கிடைக்காமல் போகட்டும். நகரத்தில் ஓய்வெடுக்க முன்கூட்டியே வாழ்த்துகள்” என கூறியிருந்தார்.






இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வரா தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அன்பான வெறுப்பாளர்கள் மற்றும் ட்ரோலர்கள் என் மறைவுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.


நண்பர்களே, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். எனக்கு ஏதாவது நேர்ந்தால், உங்கள் வாழ்வாதாரம் ஆபத்தில் இருக்கும். உங்கள் வீட்டை எப்படி நடத்துவீர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.


நாடு முழுவதும் நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கெடுத்தவர் ஸ்வரா பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண