மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில், சென்னை, திருவளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் படகுகளில் பயணிக்கின்றனர். மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் தண்ணீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. 


சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் இடுப்பளவு மற்றும் முட்டியளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. பலரும் உணவு, தண்ணீர் இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு சார்பில் படகு மூலம் உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உதவி எண்கள் அறிவிப்பு 


மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களுக்கு உதவி  தேவைப்பட்டால் அதனைத் தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன்ன.  சென்னை மக்கள், 23452359, 23452360, 23452361, 23452377 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம்.


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஆட்சியர் பிரபு சங்கருக்கு 9444132000 என்ற எண்ணிலும், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா 9445000410 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹரிஷ் கல்யாண் நிவாரண நிதி 


இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ‘கை கோர்ப்போம்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார். 






ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் மூலம் பிரபலமானவர். இதனையடுத்து  இவர் நடிப்பில் நடிப்பில் ‘பியார் பிரேம காதல்’ என்ற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க


UGC EXAM : புயல் பாதிப்புக்கு நடுவே சென்னையில் யுஜிசி நெட் தேர்வு; மாணவர்கள் வேதனை- ஒத்திவைக்கக் கோரிக்கை! 


Helpline Numbers: மிக்ஜாம் புயல் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!


Aavin Milk: நிறுத்தப்பட்ட உற்பத்தி.. இரண்டாவது நாளாக முடங்கியது ஆவின் பால் விநியோகம்! காரணம் என்ன..?