மயிலாடுதுறையில் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் கலந்து கொண்டார். 


US Mass Shooting: அமெரிக்காவில் பயங்கரம்.. துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு.. மர்ம நப்ரின் புகைப்படம் வெளியீடு..




கூட்டத்தை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ''சிவசேனா கட்சி கூட்டணி கட்சியான காங்., திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூ. கட்சிகள் இருக்கக்கூடிய இந்தியா கூட்டணியில் உள்ளது.


மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய பாடுபடுவோம். தமிழக அரசுக்கு மத்திய அரசும், ஆளுனரும் கொடுக்கும் அழுத்தம் தமிழக அரசின் வேகத்தை குறைக்கும் செயலாக உள்ளது.


தமிழக அரசை மத்திய அரசின் ஏஜென்சிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். உதாரணத்துக்கு, தேர்வாணைய தலைவராக சைலேந்திரபாபுவை நியமிப்பதற்கான கோப்புகளை ஆளுனர் திரும்பி அனுப்பியதைக் குறிப்பிடலாம். 


Northeast Monsoon: வலுவடைகிறதா வடகிழக்கு பருவமழை? 39% குறைவாக பதிவான மழை - வானிலை சொல்லும் தகவல் என்ன?




இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். திமுக இந்துத்துவாவுக்கு எதிராக செயல்படவில்லை. திராவிட மாடல் என்று கூறுவது அவர்களது கொள்கை. திராவிட மாடல் அரசு ஆன்மீகத்திற்கான அரசு. எல்லோருடைய மத உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இந்துத்துவாவுக்கு எதிராக செயல்படுவதாக கூறுவது, சில இந்துத்வாவுக்கு மட்டுமே இருக்கக்கூடிய போலிகளின் விஷம பிரச்சாரம். திமுக ஆட்சியில்தான் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களுக்கு அதிக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.


Governor RN Ravi: சாதி, மத சண்டை போடுவதற்கா சுதந்திரம் வாங்கினோம்? ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேச பேச்சு!




கர்நாடகாவில் அரசியல் செய்வதற்காக தண்ணீர் தர மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். அதனால், நம்முடைய உரிமையை விட்டுகொடுக்கக்கூடாது என்று நாம் போராடுகிறோம். தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் உள்ளது. கர்நாடக அரசை குறைசொல்லக்கூடாது'' என்று தெரிவித்தார்.


Jigarthanda Double X: 'என் படத்துல நீங்க ஒன்னும் நடிக்க வேணாம்' எஸ்.ஜே.சூர்யாவிடம் கோபித்துச் சென்ற கார்த்திக் சுப்பராஜ்