அரபிக் கடல் மற்றும் வங்கு கடலில் உருவான புயல்களின் காரணமாக வடகிழக்கு பருவமழையின் தொடக்க நிலை வலுவற்றதாக இருந்த சூழலில் தற்பொழுது புயல்கள் கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்குகிறது என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.




வரும் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழையின் தொடக்க நிலை மெல்ல வலுப்பெற்று தமிழ்நாட்டில், கடலூர், சிவகங்கை

மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலிலும் கனமழை என்ற பெய்யும் வாய்ப்பு உள்ளது என  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


வடகிழக்கு பருவமழை:


மேலும் வடகிழக்கு பருவமழையின் மழை கணக்கீடும் காலம் முறையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை  தமிழ்நாட்டில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் இயலான மழை அளவு 129.9 மி.மீ. ஆகும்.  இதுவரை வடகிழக்கு பருவமழை  இயல்பை விட 39% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.


30.10.2023 மற்றும் 31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


பெரியார் (தேனி மாவட்டம்), கிளானிலை (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 6,  கல்லந்திரி (மதுரை மாவட்டம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 5, நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்), களியல் (கன்னியாகுமரி மாவட்டம்), திற்பரப்பு (கன்னியாகுமரி மாவட்டம்), குழித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 4, திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்), சேர்வலர் அணை (திருநெல்வேலி மாவட்டம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி மாவட்டம்), நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  


அதேபோல், அன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்), தலைஞாயர் (நாகப்பட்டினம் மாவட்டம்), சிவகங்கை (சிவகங்கை மாவட்டம்), தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்), இளையங்குடி (சிவகங்கை மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), கன்னியாகுமாரி (டிஸ்ட்) சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்), பெரியகுளம் (தேனி மாவட்டம்), வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்), பெரியகுளம் ஏடபிள்யூஎஸ் (தேனி மாவட்டம்), திருக்குவளை (நாகப்பட்டினம் மாவட்டம்), பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.   


Amala Paul: பிறந்தநாளில் லவ் ப்ரபோஸ்..காதலரை அறிமுகம் செய்த அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!


அரசுப் பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்; மீறினால்... அமைச்சர் அன்பில் எச்சரிக்கை!