மேலும் அறிய

Nanjil Sampath: ரயில் பயணத்தின்போது திடீர் உடல் நலக்குறைவு.. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்...!

பிரபல அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரபல அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகேயுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திராவிட இயக்க சிந்தனையாளரான  இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர்.  இவர் மதிமுகவில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்த நிலையில், அதன்பின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால், அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். அந்த சமயம் நாஞ்சில் சம்பத் கடுமையாக பிற கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்து செயல்படுவார் என நினைத்த நிலையில் கட்சியில் திராவிடமும், அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் என்னால் இருக்க முடியாது என அதிரடியாக பேசி அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். 

இலக்கிய மேடைகளில் தொடர்ந்து தென்படும் நாஞ்சில் சம்பத் நடுவில் சினிமாவிலும் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். சமீபகாலமாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் நாஞ்சில் சம்பத் கடந்த சில ஆண்டுகளாகவே மூளையில் ஏற்பட்ட  ரத்த கசிவு காரணமாக உருவான வலிப்பு , ஞாபக மறதி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே நேற்று முன்தினம் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயிலில் சென்ற நாஞ்சில் சம்பத்துக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், இதனால் அவர் ரயிலிலேயே திருவனந்தபுரத்துக்கும் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்து திருவனந்தபுரம் வந்த நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் நாகர்கோவிலிலுள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாஞ்சில் சம்பத் மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவரின் மகனும், மருத்துவருமான சரத்பாஸ்கர் துணையுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நிலை சீராக 3 நாள்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. அவரை அரசு மருத்துவ கல்லூரியின் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  

இவருக்கு இது போன்று இரண்டு முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு இரண்டு, மூன்று  நாட்களுக்கு பின் சரியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget