மேலும் அறிய

வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு : ஆத்தூரில் பாமகவினர் சாலை மறியல்.. பஸ் கண்ணாடிகள் உடைப்பு

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க வேண்டும என்றனர்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமுதாயத்திற்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கி சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு அளித்ததுள்ளது. இந்த உத்தரவைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களிலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு : ஆத்தூரில் பாமகவினர் சாலை மறியல்.. பஸ் கண்ணாடிகள் உடைப்பு

இதன் ஒரு பகுதியாக , சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அவ்வழியாக வந்த அரசு நகர பேருந்துகளை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அரசு பேருந்து  முன் பக்க கண்ணாடி  முழுவதும் உடைந்து சேதமானது.மேலும்,  பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்த இருவரை ஆத்தூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு : ஆத்தூரில் பாமகவினர் சாலை மறியல்.. பஸ் கண்ணாடிகள் உடைப்பு
மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் இராமதாஸ், மாநில துணை தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கூறுகையில், ”கடந்த 40 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு போராடி பெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்திருப்பது சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் இட ஒதுக்கீடு உறுதி செய்யும் வகையில்  போராட்டம் தொடர்ந்து நடத்துவோம் என்றும், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னிய சமூகத்திற்கு செய்த துரோகம்” என்று கூறினார். மேலும் ,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் சாலை மறியலில் வன்னியர் பேரவை மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இணைந்து நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget