மேலும் அறிய

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்; வருஷத்துக்கு எத்தனை கோடி தெரியுமா ? - தகவல் வெளியிட்ட இபிஎஸ்

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் , ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

டாஸ்மாக் கடைகளில் சோதனை

மது விலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது , அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் நடத்திய சோதனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார். இதற்கு பேரவை தலைவர் அனுமதி மறுத்ததை கண்டித்து , அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,

டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மது ஆலைகளுக்கு சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஊடகங்களில் பத்திரிகை செய்தி வெளியானது.

இது தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு கேட்டோம். மது விலக்கு துறை மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசினால் தான் உரிய பதில் கிடைக்கும் என்று இன்று பேரவையில் பேச முயன்றோம் ஆனால் இந்த பிரச்சனை குறித்து பேசுவதற்கு பேரவை தலைவர் முழுமையாக அனுமதியை மறுத்து விட்டார்.

குற்றச்சாட்டு உண்மை தானோ ?

ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கை குறித்து , இதுவரையில் தமிழக அரசின் சார்பிலோ, துறை சார்ந்த அமைச்சர் சார்பிலோ இது வரையில் விளக்கம் அளிக்காதது ஏன் ? 

இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்காததை பார்க்கும் பொழுது , ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு உண்மை தானோ என்று என்ன தோன்றுகிறது.

இன்றைக்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உட்பட்ட மதுபான விற்பனை கடைகளில் , ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது. அப்படியென்றால் , ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் இந்த அரசு மதுபான கடைகளின் மூலமாக ஊழல் செய்து பல்வேறு தரப்புக்கு போயிருக்கின்றது இந்த பணம். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி ரூபாய் என்றால் , ஒன்றரை கோடி பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் , பதினைந்து கோடி ரூபாய் ஆகும். 30 நாட்களுக்கு 450 கோடி ஆகிறது. இந்த ஆட்சியில் , இந்த மதுக்கடை விற்பனை மூலமாக 12 மாதத்திற்கு கிட்டத்தட்ட 5400 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரிய வருகிறது.

மக்களை ஏமாற்ற தயாரிக்கப்பட்ட வாக்குறுதி

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அண்மைக் காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையால் , தமிழ்நாடு குடிநீர் வாரிய மின் மோட்டார்கள் முறையாக செயல்படாததால் , சென்னை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கவும் சிரமமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விவசாய தொழிலாளர்களுக்கும் முறையாக வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் , பல்வேறு தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு தொழில் தொடங்க சென்று விட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என்ற வாக்குறுதி , ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இதனைப் பார்க்கும் பொழுது 2021 ஆம் ஆண்டு திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே , தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே தயாரிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி தான் என்றார்.

தலைப்பு செய்திகள்

அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
அரசு கல்லூரி மாணவர்கள் போராடத் தடை? முதல்வர் பரிசீலனை - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
விஜய் விளம்பரத்தில் நடித்த ஜோய் அலுக்காசுடன் ஒப்பந்தமா? அதிமுக சந்தேகத்தை கிளப்புவது ஏன்?
விஜய் விளம்பரத்தில் நடித்த ஜோய் அலுக்காசுடன் ஒப்பந்தமா? அதிமுக சந்தேகத்தை கிளப்புவது ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Gold and silver rate today: வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
வார கடைசி நாளில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தது? வாங்க கடைக்கு போகலாமா?
Embed widget