அதிமுக ஆட்சியின்போது வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை வரவேற்கிறேன்.
ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு பொருத்தாமானதே. அதனையும் விசிக வரவேற்கிறது. தமிழ் தேசியம் என்றெல்லாம் நாம் பேசுவதற்கு நவம்பர் ஒன்றாம் தேதிதான் காரணம். அந்தத் தேதியையும் அரசு சார்பில் கொண்டாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவம்பர் ஒன்றாம் தேதியை கொண்டாடுவதற்கு எல்லை போராட்ட வீரர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேச வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி, ஜூலை 18ஆம் தேதி இடையேயான முரண்பாடுகளை களைய வேண்டும்.
10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு அவசர கதியில் கொண்டுவரப்பட்டது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு இப்படித்தான் முடியும் என்று அதிமுக, பாமகவிற்கு தெரிந்தும் வாக்குக்காக மக்களை ஏமாற்றினர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைபெரியாறு அணையை கேரளா தன்னிச்சையாக திறந்துவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விவசாய சங்கங்களை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும் . சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மேல்முறையீடு செய்தால் பலனளிக்குமா என்பது தெரியவில்லை.
69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்பாக இருப்பதாகவே நினைக்கிறேன். ஆளுநர் ஆய்வு விவகாரத்தில் அரசு விழிப்புணர்வாக இருக்கிறது. மாநில சுயாட்சியை அரசு பாதுகாக்க வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Virat Kohli Performance: எங்கே சறுக்குகிறார் கோலி...? ஏன் தொடர்கிறது தோல்வி? ஆராயும் ABP நாடு!
‛மாணவர்களின் பெற்றோர் கண்காணிக்கப்படுவர்...’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கரூரில் திறக்கப்பட்ட 1062 பள்ளிகள்...! - மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்...!
ஸ்டாலின் வீட்டில் உதயநிதியின் தீவிர ரசிகர் செய்த ரகளை... பதட்டமான முதல்வர் வீடு!