சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய ஒருவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் முதலமைச்சரின் வீட்டுக்கு சென்று வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அலைபேசி எண்ணை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் அந்த எண்ணின் சிக்னல் வண்டலூர் அடுத்துள்ள மாம்பக்கம் பகுதியில் இருந்திருக்கிறது.
உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர். அவரிடம் காவல் துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பதும், அவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிவதும் தெரிந்தது.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரிக்கையில், நடிகரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகர் பழனிவேல். அதுமட்டுமின்றி அவர் பாடகரும்கூட.
உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத்தில் பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மது அருந்தியிருந்த பழனிவேல், போதை அதிகமாகி வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Parotta Festival | இந்த கடைக்குப்போய் இத்தனை பரோட்டா சாப்பிட்டா, தங்க நாணயம் உட்பட இதெல்லாம் பரிசு..!
Arun Vijay | கிராமம்.. ஆக்ஷன்.. அதகளம்.. அருண் விஜய் கொடுத்த அதிரடி அப்டேட்..
4 மணி நேரத்தில் ரூ.4 கோடிக்கு விற்றுத் தீர்த்த ஆடுகள்... களைகட்டும் தீபாவளி!