ஐபிஎல் தொடரை அடுத்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கோப்பையை வெல்லும் ரேஸில் இந்திய அணி முந்திச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து என இரு முக்கிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை இழந்து அரை இறுதிக்கு தேர்ச்சி பெறுவதற்கான ரேஸில் எதிர்ப்பாராதவிதமாக பின் தங்கியுள்ளது.

இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களின் ஐபிஎல் பர்ஃபாமென்ஸ் எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, அடுத்த மூன்று போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் ஆகியவற்றை பற்றிய நச் அலசல் இதோ!

விராட் கோலி

vs  பாகிஸ்தான், துபாய் கிரிக்கெட் மைதானம் - 57 (49)

vs நியூசிலாந்து, துபாய் கிரிக்கெட் மைதானம் - 9 (17)

ஐசிசி தொடர்களின் பெரும்பாலான முக்கிய போட்டிகளில், விராட்டின் பேட்டிங் நம்பியே இந்திய அணி கரை சேர்ந்திருக்கிறது. விராட் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணிக்கு அது சாதகமற்ற போட்டியாகவே முடிந்துள்ளது. இந்த ஃபார்மெட் இந்த உலகக்கோப்பையிலும் தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் ராகுல், ரோஹித் சொதப்பினர். அழுத்தமான சூழலில் ஒன் டவுன் களமிறங்கிய விராட், நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். விராட் சமாளித்ததன் விளைவு, பண்ட் ஓரளவு ரன் சேர்த்ததால், இந்திய அணியின் 151 ரன்களை எட்டியது.

இதுவே, அடுத்த போட்டியில், ஓப்பனர்கள் ராகுல், கிஷன் சொதப்ப, ஒன் டவுன் களமிறங்கிய ரோஹித் சொதப்ப, விராட்டாலும் தாக்குப்பிடிக்க முடிக்கவில்லை.  விராட் சொதப்பலை அடுத்து களமிறங்கிய வீரர்களும் சுமாரான ரன்களுக்கு வெளியேறி அணியை சிக்கலில் படுக்க வைத்தனர். இதனால், 110 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் துபாய் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடரில் டாஸ் வெல்வது முக்கியமான பாயிண்ட்டாக பார்க்கப்பட்டாலும், இந்திய அணியின் பேட்டிங் இந்த சீசனில் சொதப்பலாகவே இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இப்போது ஐபிஎல் தொடருக்கு ஒரு ரீகேப்!

ஐபிஎல் தொடரில் விராட் கோலி: கடைசி ஐந்து போட்டிகளில்: 

ராயல் சாலஞ்சர்ஸ் அணி கேப்டனாக கோலி விளையாடி இருக்கும் கடைசி ஐபிஎல் தொடரில், ஓப்பனராக களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்தார். ஓப்பனராக களமிறங்குவது உலகக்கோப்பையில் ரோஹித்துடன் அவர் ஜோடி சேர்வார் என்பதற்காகதான் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், டி-20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஒன் டவுன் இறங்கிய கோலி, அடுத்த போட்டியில் இஷான் கிஷனை இறக்குவிட்டு, ரோஹித்தை ஒன் டவுன் இறக்கி, இவர் நான்காவதாக இறங்கியது பேட்டிங் லைன் - அப்பையே குழப்பியது! ஒவ்வொரு முறையும், முக்கியமான போட்டிகளின்போது விராட் சோதனை செய்வது அணிக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது.

vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ப்ளே ஆஃப்) ஷார்ஜா  30 (33)
vs டெல்லி கேப்பிடல்ஸ் துபாய் 4 (8)
vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அபு தாபி 5 (4)
vs பஞ்சாப் கிங்ஸ் ஷார்ஜா  25 (24)
vs ராஜஸ்தான் ராயல்ஸ்  துபாய்  25 (20)

இனி மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொருத்தே இந்திய அணியின் தேர்ச்சி முடிவு செய்யப்படும். கிட்டத்தட்ட இந்திய அணிக்கு உலகக்கோப்பை முடிந்துவிட்டது என்ற நிலையை எட்டினாலும், கடைசி மூன்று போட்டிகளிலாவது அதே தவறுகளை செய்யாமலும், குழப்பங்களுக்கு வழிவிடாமலும், டாஸ் சாதகமாகவும், பேட்டிங் லைன் அப் சாதகாமகவும், பெளலிங் பர்ஃபாமென்ஸ் விக்கெட்டுகளை தட்டினாலும்தான் இந்திய ரசிகர்களுக்கு ஆதரவு கிடைக்கும். 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண