மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.


மயிலாடுதுறையில் திரண்ட எம்எல்ஏக்கள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் (எ.தாயகம் கவி), பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், போர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ் அவர்கள் ஆகியோர்  அடங்கிய குழு பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


TNPSC: இன்டர்வியூ இல்லை; மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு




செய்தியாளர் சந்திப்பு 


கூட்டத்திற்குப்பின் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு தலைவரும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை காப்பியடித்து மத்திய பட்ஜெட்டில் சொல்லியுள்ளனர். பிகாருக்கும், ஆந்திராவுக்கும் மட்டுமான நிதிநிலை அறிக்கை அல்ல. நிதிநிலை அறிக்கை என்பது நாடு முழுமைக்குமானது. பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது குறித்தெல்லாம் சொல்லாமல் தமிழக பாஜக தலைவர்கள் உண்மைக்கு புறம்பாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.


Mayor Election Announced : "ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு” மேயர், நகராட்சி சேர்மன் மறைமுகமாக தேர்ந்தெடுக்க முடிவு..!"




அன்புமணி கருந்துக்கு எதிர்வினை ஆற்றிய செல்வப் பெருந்தகை 


ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு வகையில் செலவு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை சொல்கிறது. இதற்கெல்லாம் பாஜகவினர் பதில் சொல்ல வேண்டும். ’பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லியிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்.பிக்களை கொடுத்திருக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். 25 எம்.பிக்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா?. தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் . 


MR Vijayabaskar: எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி




ஜெயலலிதா பிந்தைய அதிமுகதான் மின் உயர்வுக்கு காரணம் 


ஜெயலலிதா இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. இத்திட்டத்தால் தமிழக உரிமை பறிக்கப்படும் என்று ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியுள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்திட்டதால்தான் தற்பொது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்துளோம்” என்றார்.


Paris Olympics 2024:உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பாரீஸ் ஒலிம்பிக்; பிரதமர் மோடி பங்கேற்கிறாரா?