பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் 33 வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்று (ஜூலை 26) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் 117 தடகள வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை நோக்கி களம் காண்கின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். அந்த வகையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளும் தலைவர்கள் யார் என்பது தொடர்பான பட்டியலை இங்கே பார்ப்போம்:
கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள்:
1. இம்மானுவேல் மக்ரோன் - பிரான்ஸ் அதிபர்
2. ஐசக் ஹெர்சாக் - இஸ்ரேல் அதிபர்
3. கெய்ர் ஸ்டார்மர் - இங்கிலாந்து பிரதமர்
4. ஓலாஃப் ஸ்கோல்ஸ் - ஜெர்மனி அதிபர்
5. அலெக்சாண்டர் ஸ்டப் - பின்லாந்து அதிபர்
6. கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் - பிரதமர் கிரீஸ்
7. இராக்லி கோபாகிட்ஸே - ஜார்ஜியாவின் பிரதமர்
8. சலோமி ஜுராபிஷ்விலி - ஜார்ஜியாவின் ஜனாதிபதி
9. மியா சாண்டு - மால்டோவாவின் ஜனாதிபதி
10. ஜில் பிடன் - அமெரிக்க முதல் பெண்மணி
11. இளவரசி அன்னே - ஐக்கிய இராஜ்சியத்தின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் சகோதரி
12 மொனாக்கோவின் இளவரசர் ஆல்பர்ட்
13. ஃபெலிப் ஆறாம் - ஸ்பெயினின் மன்னர்
14. டென்மார்க்கின் அரசர் ஃபிரடெரிக்
15. ரோசங்கலா லுலா டா சில்வா - பிரேசிலின் முதல் பெண்மணி
16. ஜேவியர் மிலே - அர்ஜென்டினாவின் ஜனாதிபதி
17. குஸ்டாவோ பெட்ரோ - கொலம்பியாவின் ஜனாதிபதி
18. பிரைஸ் ஒலிகுய் நுகுமா - காபோன் ஜனாதிபதி
19. பால் பியா - கேமரூன் ஜனாதிபதி
20. பால் ககாமே - ருவாண்டாவின் ஜனாதிபதி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடக்க விழாவில் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Paris Olympics 2024:அன்று வெள்ளி வென்ற வீராங்கனை.. பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மீரா பாய் சானு!
மேலும் படிக்க: Paris Olympics 2024:பாரீஸ் ஒலிம்பிக்..தங்கம் வெல்ல காத்திருக்கும் லோவ்லினா போர்கோ