ராஜினாமா, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 6ஆம் தேதி தேர்தல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


கோவை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க தேர்தல்


அதில், ஒரே கட்டமாக இந்த தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அதுவும் மறைமுக வாக்குகளின்படி தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது. குறிப்பாக, கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ராஜினமா செய்துள்ள நிலையில், அங்கு புதிய மேயருக்கான தேர்தல 6ஆம் தேதி நடைபெறுகிறது. அதோடு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவள்ளூர் மாவட்டங்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல நடத்தப்படவுள்ளது.