பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ரவி ராஜா பினி செட்டியின் 76 வது வயது பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விஜயரத சாந்தி விழாவில் அவரது மகன்கள் இயக்குனர் சத்திய பிரதாஸ், நடிகர் ஆதி அவரது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.


எமன் உயிர்ப்பித்த இடம்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். 




ஆண்டின் 365 நாட்களும் திருமணம் 


இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம்நூறு வயதில் பூரணா அபிஷேகம், 120 வயதில் மகுடாபிஷேகம் செய்து வயதான தம்பதிகள் ஆயுள் விருத்தி அடைவது ஐதீகம். செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். 




கோயிலுக்கு வந்த பிரபலங்கள் 


இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ரவி ராஜா பினி செட்டி அவரது மனைவி ராதாராணி ஆகியோர் பினி செட்டியின் 76 ஆவது வயது பூர்த்தியை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் விஜய ரத சாந்தி செய்து வழிபாடு செய்தனர். சிரஞ்சீவி, அமிதாபச்சன், வெங்கடேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் போன்ற பல்வேறு நடிகர்களை வைத்து 55 படங்களை இயக்கியுள்ள ரவி ராஜா பினிசெட்டியின் விஜயரத சாந்தி விழாவில் இவரது மூத்த மகன் இயக்குனருமான சத்திய பிரபாஸ் மற்றும் மிருகம், ஈரம், அய்யனார், அரவான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகருமான இரண்டாவது மகன் நடிகர் ஆதி அவரது மனைவியும் நடிகையுமான நிக்கி கல்ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் விழாவில் பங்கேற்றனர்.




குடும்பத்துடன் வழிபாடு 


முன்னதாக குடும்பத்தினர் கோ பூஜை, கஜ பூஜை, செய்து 32 கலசங்கள் வைக்கப்பட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்துஞ்சிய ஹோமம், ஆயுள் ஹோமம் உள்ளிட்டவைகளை கணேச குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து பூரணாகுதி செய்யப்பட்டு தம்பதிகள் அனைவரும் மாலை மாற்றிக்கொண்டு புனித நீர் அடங்கிய கலசங்களை கையில் ஏந்தியவாறு ஆலய வெளிப்பிரகாரத்தில் தம்பதிகளுக்கு புனித நீரால் கலசாபிஷேகம் செய்தனர்.  பின்னர் தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் இனிப்புகள் ஊட்டி விழா நடைபெற்றது. அனைவரும் குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, கள்ள வாரன பிள்ளையார், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளில் வழிபாடு மேற்கொண்டனர்.