Pongal 2024: திருக்கடையூரில் தொடங்கியது உலகப் புகழ் பெற்ற ரேக்ளா ரேஸ்...! 

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற ரேக்ளா ரேஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியில் கலந்து கொள்வார். பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த எல்கை பந்தயம் கடந்த ஆண்டுக்கும் முந்தைய மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டு இருந்தது. 

Continues below advertisement

MGR Birthday: எம்.ஜி.ஆருக்கு பதில் அரவிந்த்சாமிக்கு பேனர்! திருப்பத்தூர் அ.தி.மு.க.வினர் செயலால் பெரும் பரபரப்பு!


தொடர்ந்து இந்தாண்டு 44வது ஆண்டாக காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Alanganallur Jallikattu 2024: ஆரவாரத்துடன் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஏற்பாடுகளும், சிறப்பம்சமும் என்ன?


மேலும், கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு அமிர்த விஜயகுமார் தலைமையில் 30 பேர் கொண்ட விழா குழுவினர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காணும் பொங்கல் தினத்தில் குதிரை மாடுகளுக்கான எல்கை பந்தயம் 44 -ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் இன்றி இப்போட்டியில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jallikattu 2024: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் 73 பேருக்கு காயம்! 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!


திருக்கடையூரில் உத்திராபதியார் நினைவாக 43 ஆண்டாகவும், நாராயணசாமியின் 11 -ம் ஆண்டு நினைவாக காணும் பொங்கல் அன்று மாடு, குதிரைகளை கொண்டு ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) நடத்துவது வழக்கம். அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்குச் சிறிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்-யில் தொடங்கி என்.என்.சாவடி தொடக்கப்பள்ளி வரை 5 கி.மீ. நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணிக்கு நடு மாடுகள், பெரிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்-யில் தொடங்கி அனந்தமங்கலம் ஆர்ச் மற்றும் மகிமலையரு பாலம் வரை நடைபெறும்.


அதுபோன்று, குதிரைகளுக்கான ரேக்ளா ரேஸ் மதியம் 1.30 மணிக்கு திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்-யில் தொடங்கி தரங்கம்பாடி பேருந்து நிலையம் வரை 10 கி.மீ. நடைபெறுகிறது. இதனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திருக்கடையூரில் குவிந்துள்ளனர். தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முன்னதாக கால்நடை மருத்துவர் குழுவினர் பேட்டியில் பங்கேற்கும் மாடு மற்றும் குதிரைகளை பரிசோதனை செய்து தகுதி சான்றுகள் வழங்கி போட்டிகளுக்கு அனுமதித்தனர். ரேக்ளா பந்தயத்தை அடுத்து பாதுகாப்பு பணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Kaanum Pongal 2024: காணும் பொங்கல் கொண்டாட்டம்! வரலாறு என்ன? சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Continues below advertisement
Sponsored Links by Taboola