மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
பா.ம.க பிரமுகர் கொலை வழக்கு
கடந்த 2019-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான ராமலிங்கம் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை அவ்வபோது சோதனை நடத்தி வருகிறனர்.
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் - எங்கு?யார் பொறுப்பு? முழு விவரம்
தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை வந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மாவட்டத்தில் இரு பிரிவுகளாக பிரித்து, வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். நவாஸ் கான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
அதிகாலை முதல் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர்களின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படுகிறதா என பின்னர் தான் தெரியவரும். தேசிய புலனாய்வு முகமை சோதனையை அடுத்து இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!