Paris Olympics 2024 Matches Today, august 1st: பாரிஸ் ஒலிம்பிக்கில் சீனா 9 தங்கப் பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வீரர், வீராங்கனைகளை பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐந்து நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, 9 தங்கம், 7 வெள்ளி  மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 8 தங்கம் உட்பட 26 பதக்கங்களுடன் ஃப்ரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 8 தங்கம் உட்பட 15 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா இரண்டு வெண்கல பதக்கத்துடன் 39வது இடத்தை பிடித்துள்ளது.

வ.எண் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 9 7 3 19
2 ஃப்ரான்ஸ் 8 10 8 26
3 ஜப்பான் 8 3 4 15
4 ஆஸ்திரேலியா 7 6 3 16
5 இங்கிலாந்து 6 6 5 17
6 தென்கொரியா 6 3 3 12
7 அமெரிக்கா 5 13 12 30
8 இத்தாலி 3 6 4 13
9 கனடா 2 2 3 7
10 ஜெர்மனி 2 2 2 6

 

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:

தடகளம்: ஆண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக் (அக்ஷ்தீப் சிங், விகாஸ் சிங், பரம்ஜீத் பிஷ்ட்) | காலை 11 மணி முதல்

பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் சுற்று 16 மற்றும் பெண்கள் இரட்டையர் காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மதியம் 12 மணி முதல்

கோல்ஃப்: ஆண்கள் சுற்று 1 (ககன்ஜீத் புல்லர், சுபங்கர் ஷர்மா) |12:30 மணி முதல்

தடகளம்: பெண்களுக்கான 20 கிமீ ரேஸ் வாக் (பிரியங்கா கோஸ்வாமி) | மதியம் 12:50 மணி முதல்

வில்வித்தை: 64 & 32 ஆண்களுக்கான தனிநபர் சுற்று மற்றும் 64 & 32 பெண்களுக்கான தனிநபர் சுற்று | மதியம் 1 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 50மீ ரைபிள் 3 நிலைகள் ஆண்களுக்கான இறுதிப் போட்டி (ஸ்வப்னில் குசாலே) | மதியம் 1 மணி முதல்

படகோட்டுதல்: ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் SF A/B | மதியம் 1:20 மணி முதல்

ஹாக்கி: ஆண்கள் குழு B | இந்தியா v பெல்ஜியம் | மதியம் 1:30 மணி

டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் காலிறுதி | மதியம் 1:30 மணி முதல்

குத்துச்சண்டை: பெண்களுக்கான 50 கிலோ சுற்று 16 (நிகத் ஜரீன் vs யு வு (சீனா)) | மதியம் 2:30 மணி முதல்

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மதியம் 2:30 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 50மீ ரைபிள் 3 நிலைகள் பெண்களுக்கான தகுதி (சிஃப்ட் கவுர் சாம்ரா, அஞ்சும் மௌத்கில்) | மாலை 3:30 மணி முதல்

படகோட்டம்: ஆண்களுக்கான டிங்கி ரேஸ் 1|2 (விஷ்ணு சரவணன்) | மாலை 3:45 மணி முதல்

பேட்மிண்டன்: ஆண்கள் இரட்டையர் காலிறுதி (சாத்விக் & சிராக்) | மாலை 4:30 மணி முதல்

படகோட்டம்: பெண்களுக்கான டிங்கி ரேஸ் 1|2 (நேத்ரா குமணன்) | இரவு 7:05 மணி முதல்

பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் சுற்று 16 (பி.வி. சிந்து) | இரவு 10 மணி முதல்