மயிலாடுதுறையில் கடந்த 2003-ம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


2003 -ம் ஆண்டு நடைபெற்ற பேரணி


மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நெ.1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நெ.2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர். 


Radio Jobs Recruitment: தமிழ் தெரியுமா? வானொலி நிலையத்தில் வேலை- சென்னைவாசிகள் விண்ணப்பிக்கலாம்!




காவல்துறையினருக்கும் விசிகவினருக்கும் இடையே மோதல் 


அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும், விசிகவினருக்கும் மோதல் உருவாகியது. மேலும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின்பேரில் பிரிவு 147, 148, 337, 307, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.


UPSC New Chairman: சர்ச்சைகளில் சிக்கிய யுபிஎஸ்சி; புதிய தலைவர் நியமனம்; யார் இந்த ப்ரீத்தி சுதன்?




மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு


இதுதொடர்பாக, மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் ஆஜராகாத தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார். மத்திய அரசின் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால் பிடியானை பிறப்பித்து உத்தரவு பிறப்பித்து இவ்வழக்கினை ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Medical Counselling: தமிழ்நாட்டில் ஆக.21 முதல் மருத்துவக் கலந்தாய்வு- தரவரிசைப் பட்டியல் எப்போது?