மயிலாடுதுறையில் வகுப்பறையை கூட்டாமல் சென்ற மாணவியை அடித்ததாகவும், ஒழுக்கம் என்ற பெயரில் மாணவிகளை கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, மாணவியின் பெற்றோர் டிசியை பெற்றுச் சென்றுள்ளனர்.


பள்ளிக்கு சென்ற இரண்டாம் நாள் டிசி பெற்ற மாணவி


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சின்ன நாகங்குடியை  சேர்ந்தவர்கள் செல்வராஜ் - ஜெயந்தி தம்பதியினர். இவர்களது இரண்டாவது மகள் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் உள்ள குருமூர்த்தி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று புனித சின்னப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் நாளாக மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.


Actor Darshan: கூலிப்படையை ஏவி கொலையா..? சிக்கிய ஆயுதங்கள்.. பிரபல திரைப்பட நடிகர் தர்ஷன் கைது!




மாணவியை ஆசிரியர் அடித்ததாக குற்றச்சாட்டு 


இந்நிலையில் அந்த பள்ளியில்  பள்ளி முடிவடைந்து வீட்டிற்கு செல்லும் போது ஆசிரியர் ஒருவர் மாணவியை வகுப்பறையை கூட்ட சொல்லியதாகவும், அப்போது அந்த மாணவி வீட்டுக்கு செல்ல பள்ளி வேன் நிற்பதாகவும், வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் தன்னை அடித்து விட்டதாக வீட்டுக்கு சென்ற மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 


“சுத்தம் என்பது நமக்கு முக்கியம் மத்ததெல்லாம் அப்புறம்” - களத்தில் குதித்த தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு




பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக புகார்


அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இன்று மாணவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்து, படிக்க வந்த தங்கள் மகளை எப்படி கூட்ட சொன்னீர்கள்? என்று பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவியை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக கூறி மாணவியின் மாற்று சான்றிதழை பெற்று சென்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்தினர் வேலைக்கு ஆள் வைக்காமல், வேலையாட்கள் செய்ய வேண்டிய வேலைகளை படிக்கும் மாணவிகளிடம் செய்ய கூறி கொடுமைப்படுத்தி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


Valakarutheeswarar Temple: “கனிமொழி முதல் ஜெயலலிதா வரை” - விஐபிகள் படையெடுத்த வழக்கறுத்தீஸ்வரர் கோயில் - சிறப்புகள் தெரியுமா?




பள்ளி நிர்வாகம் விளக்கம்


இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், நேற்று பள்ளியில் மதியம் 3.30 மணியில் இருந்து ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாகவும், வகுப்பறைக்கு ஆசிரியர்கள் ஒருவரும் செல்லவில்லை என்றும், மாணவியை யாரும் அடிக்கவில்லை என்று  தெரிவித்துள்ளனர். பள்ளியில் உள்ள வகுப்பறைகளை ஒவ்வொரு நாளும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது வழக்கம் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்நாள் பள்ளி சேர்ந்து பள்ளியின் செயல்பாடு காரணமாக மறுநாளே மாற்று சான்றிதழ் பெற்ற சம்பவம் அப்பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


TN Headlines: மாணவர்களுக்கும் ரூ.1000 அறிவிப்பு; ஜூன் 20ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை: இதுவரை இன்று