Vikravandi By Election: விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா.. வேட்பாளரை அறிவித்த திமுக..!


Vikravandi By Election: விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி விக்ரவாண்டியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், தேர்தல் ஆணையம் தேதியை வெளியிட்ட மறுநாளே அதிரடியாக வேட்பாளரை அறிவித்தது திமுக. அதன்படி, விக்ரவாண்டியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


CM Stalin: இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு CM Stalin: அடுத்த இரண்டு ஆண்டுகள் மிக முக்கியமானது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


. புதுமைப்பெண் திட்டம் போல,  மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம் தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள்! இதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள்! புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு - வினாடிக்கு 390 கன அடியாக குறைந்தது.


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 656 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 795 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 390 கன அடியாக குறைந்துள்ளது.


Trichy Airport: திருச்சி புதிய விமான முனையம் திறப்பு - என்னென்ன வசதிகள் உள்ளன? திருச்சி புதிய சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது, பயணிகள் மகிழ்ச்சி


பயணிகளின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்பு கோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் என்பது குறிப்பிடத்தக்கது.


Bakrid 2024 : களைகட்டும் பக்ரீத் பண்டிகை ஏற்பாடுகள்..


திருப்புவன சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஜோர் ”நாட்டுக் கோழி கிலோ 200 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோழிகளின் வரத்து குறைந்ததால் விலை, உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


TN Assembly Session: ஜூன் 20ம் தேதியே தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்


- காரணம் என்ன? TN Assembly Session: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் திட்டமிட்டதை விட முன்கூட்டியே தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.