தரங்கம்பாடியில் சீகன்பால்கு இல்லத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஓவியர்களால் அமைக்கப்பட்டுள்ள ஓவிய கண்காட்சி 500 -க்கு மேற்பட்ட வித்தியாசமான படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. 


சீகன்பால்கு இல்லத்தில் ஓவிய கண்காட்சி 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞர் சீகன் பால்குவின் இல்லத்தில் மயிலாடுதுறை நகர்ப்புற ஓவியர்கள் சார்பில் பல்வேறு கலைஞர்கள் இணைந்து நடத்தும் ஓவிய கண்காட்சி துங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஓவிய கண்காட்சியில் ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியர் விக்னேஷ், மற்றும் ஓவியர்கள் முத்துக்குமார் உள்ளிட்ட ஏழு ஓவியர்கள் இணைந்து 500 -க்கும் மேற்பட்ட ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் அடங்கிய படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். 


HRA Claim Rules: வருமான வரி தாக்கல் - வீட்டு வாடகை அலவன்ஸை பெறுவது எப்படி? வரிச்சுமையை தவிர்க்க வழி..!




பல்வேறு வகையான ஓவியங்கள் 


மேலும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 3டி ஆர்ட் ஓவியம், ஆயில் பெயிண்ட் ஓவியம், சூரிய ஒளிக்கதிர்களால் வரையப்பட்ட ஓவியம், முட்டைகளில் மனிதனின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்த ஓவியம், பாட்டிலில் வரையப்பட்ட ஓவியம், மினியேச்சர் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 


PM Narendra Modi: இந்தியா உலகிற்கு புத்தத்தை கொடுத்தது, யுத்தத்தை அல்ல - பிரதமர் மோடி பேச்சு




சீகன்பால்குவின் சூரிய ஒளி ஓவியம் 


இந்த கண்காட்சியை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு கண்டு ரசித்தனர். பின்னர் தமிழில் முதன் முதலில் காகிதத்தில் அச்சிட்ட சீகன் பால்குவை நினைவு கூறும் வகையில் ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியரான விக்னேஷ் சீகன் பால்கு வாழ்ந்த இல்லத்தின் எதிரே சூரிய ஒளி கதிர்களை பூதக் கண்ணாடியில் குவித்து சீகன்பால்கு முகத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தினார். இதனை அங்கிருந்த பலர் கண்டு வியந்து ரசித்து ஓவியர் விக்னேஷை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


PM Modi: சக்சஸ், கிராண்ட் சக்சஸ்..! ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி