வளர்பிறை பஞ்சமி மற்றும் ஆஷாட நவராத்திரியின் 5-ம் நாளை முன்னிட்டு மயிலாடுதுறை துலா கட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்கள வாராஹி அம்மனுக்கு ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் இனிப்பு பொருட்களால் அலங்காரம் செய்து நடைபெற்ற சிறப்பு வழிபாடில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு சாமி தரிசனம் செய்தனர்‌.


ஆஷாட நவராத்திரி வழிபாடு


நீங்காத துன்பத்தில் வரும் பக்தர்களின் தடையை நீக்கி, பகையை முறித்து, எதிர்ப்பை விலக்கும் ஆற்றல் வாராஹி அம்மனுக்கு உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுவும் குறிப்பாக, தேய்பிறை பஞ்சமி நாளில் வாராஹி அம்மனை வழிபாட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். ஆன்மீகத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. ஆனி மாதத்தில் வரும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.


A2B :IPO வெளியிடப்போகும் A2B உணவகம்: ரூ.10,000 கோடி வருவாயை அடைய திட்டம்..!




காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வாராஹி வழிபாடு


அம்மனின் போர்படை தளபதியாக விளங்கும் வாராஹி அம்மனுக்கு உகந்த நவராத்திரி ஆக இது பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரியினை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கடந்த 6-ம் தேதி துவங்கி மங்கள வராகி அம்மனுக்கு  தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஐந்தாம் நாளான, ஆஷான நவராத்திரியின் பஞ்சமி திதி என்பதால் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.


அரசியல் கட்சிக்கு கவுண்டவுன்.. தலித்துகள், முஸ்லிம்களை குறிவைக்கும் பிரசாந்த் கிஷோர்.. பீகாரில் பரபர!




ஏலக்காய், கிராம்பு, உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்களால் அலங்காரம்


தொடர்ந்து மங்கள வராகி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட விஷேச மங்கள பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது,  அம்மனுக்கு ஏலக்காய், கிராம்பு, உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் இனிப்பு பலகாரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச தீபாரதனைகளுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Yashasvi Jaiswal: 2024-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்.. சச்சின், கோலியின் சாதனை பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!