மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நவீன அரிசி ஆலை
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியில் 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் மூலம் இந்த அரிசி ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்படுகின்றன.
Stock Market Today:நாளை பட்ஜெட் தாக்கல்;ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை!
குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வினியோகம்
ஆலையில் நிலை 1, நிலை 2 என நெல் பதப்படுத்துல் மற்றும் அரவைப்பகுதிகளில் நெல்லை அவியல் செய்து உலர வைத்த பின்பு, அரைத்து பின்னர் அரிசியாக மாற்றி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் 100 டன் நெல் இந்த ஆலையில் அரைக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு
இவ்வாறு நெல்லை அரைக்கும்போது உமி துகள், கரிதுகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது. இதனால் கும்பகோணம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளான சித்தர்காடு, மாப்படுகை, சோழம்பேட்டை, மூவலூர் உள்ளிட்ட கிராமங்களில் கரித்துகள்கள் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் கரித்துகள்கள் விழுவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாகவும், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் கேன்சர், உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், வீடுகள், குடிநீர், விவசாய நிலங்களில் கரித்துகள்கள் படர்வதால் இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பாதிப்படைந்து வருவதாக கூறி நவீன அரிசி ஆலையை மூடக்கோரி அப்பகுதியில் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
பொதுமக்கள் போராட்டம்
அதனைத் தொடர்ந்து கடந்த 2010-ஆம் ஆண்டில் நவீன அரிசி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தொடர்ந்து ஆலை இயங்கப்பட்டு வருவதை தடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று அப்பகுதி கிராம மக்கள் சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
TMC Yuvaraja Resigns : ”பதவியை ராஜினாமா செய்தார் த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா” இது தான் காரணமா..?
சித்தர்காடு சுடுகாட்டில் ஷாமியானா பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர் அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிக விலக்கி கொண்டனர்.