சீர்காழி அருகே சிறுமி கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்து நீதிமன்ற ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
15 வயது சிறுமியை கொலை செய்த நபர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சித்தன் காத்திருப்பு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருவெண்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பின்னர், ஜாமீன் பெற்று, சிறையில் இருந்து கல்யாணசுந்தரம் வெளியே வந்தார்.
Corn Palak Pulao: பாலக்கீரையில் சுவையான புலாவ் செய்து அசத்துங்க - இதோ ரெசிபி!
தலைமறைவான கல்யாணசுந்தரம்
இந்நிலையில் கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கல்யாணசுந்தரம் தலைமறைவானார். அதனை அடுத்து நாகப்பட்டினம் போக்சோ நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரத்தை பிடிக்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் பிடியாணையை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்பேரில் திருவெண்காடு தலைமைக் காவலர் விஜயகணேஷ், முதல் நிலைக் காவலர் ஜெயக்குமார் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
Coolie: அடடே! ரஜினிகாந்துடன் நடிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் - சூப்பரான கூலி அப்டேட்
சென்னையில் கைதான கல்யாணசுந்தரம்
அதில் கல்யாணசுந்தரம் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவலர்கள் கல்யாணசுந்தரத்தை பிடித்து வந்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். ஜாமீனில் வெளிவந்த சிறுமி கொலை வழக்கு குற்றவாளி தலைமறைவாகிய நிலையில் அவரை தேடி பிடித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Bangladesh Unrest: வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவ தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!